தி.மு.க., ஆபீஸ் திறப்பு; அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட, மாநகர தி.மு.க., அலுவலகம் திறப்பு விழா அனுப்பர்பாளையம்புதுாரில் நேற்று மாலை நடந்தது.

வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று கட்சி கொடியேற்றி, அலுவலகம், கருணாநிதி சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி குத்து விளக்கேற்றி வைத்தார்.

திருப்பூர் எம்.பி., சுப்பராயன், தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட அவை தலைவர் நடராஜன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மணி, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், நாகராஜன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, தம்பி கோவிந்தராஜ், மாநகர மாவட்ட காங்., தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement