டில்லியில் உலக செஸ் * 23 ஆண்டுக்குப் பின்...

புதுடில்லி: டில்லியில் 20 ஆண்டுக்குப் பின் மீண்டும், செஸ் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.
இந்தியாவில் கடந்த 2002ல் செஸ் உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் ஆனார். பின் 2022ல் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடந்தது. தற்போது 23 ஆண்டுக்குப் பின் இந்தியாவில் மீண்டும் செஸ் உலக கோப்பை தொடர், டில்லியில் நடக்கவுள்ளது.
வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 வரை நடக்கும் இதில், உலகின் முன்னணி நட்சத்திரங்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். கடைசியாக 2023ல் நடந்த செஸ் உலக தொடர் பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா. இதையடுத்து 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.

Advertisement