லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்

2

சென்னை: இனிமேல் நயன்தாரா என்று மட்டும் அழையுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவை, ஆனால் அது உங்களை என்னிடமிருந்து பிரித்துவிடும்.

அதனால் இனி லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம். என் பெயர் தான் எனக்கு நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டுமே குறிக்கும். இனிமேல் நயன்தாரா என்றே அழையுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் எனக்கு இவ்வளவு பெரிய பெயர் கிடைத்துள்ளது. வெற்றி மற்றும் தோல்வியின்போது என்னை தோளின் மீது சுமந்து உள்ளீர்கள்.

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்றாலும் உங்கள் ஆதரவு எப்போதும் நிரந்தரமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களை மகிழ்விக்கும் வகையில் எனது கடின உழைப்பும் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
சினிமா ஒன்றுதான் நம் அனைவரையும் இணைக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை கொண்டாடுவோம்.
இவ்வாறு நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

Advertisement