தொழில் துவங்க இணைய வழியில் 'சிப்காட்' ஒப்புதல்

சென்னை:தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள் தொழில் துவங்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, சிப்காட் நிறுவனம் அமைக்கிறது. தற்போது, ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கி, 40 தொழில் பூங்காக்களை நிர்வகிக்கிறது. அவற்றில், 3,275 தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்நிறுவனங்கள், தங்களின் கட்டடத்தின் அலுவலகங்களை வாடகைக்கு விடுதல், நிறுவனத்தின் மேலாண்மை குழு மாற்றம், வங்கிகளில் கடன் வாங்க தடையில்லா சான்று உள்ளிட்ட சேவைகளுக்கு, 'சிப்காட்' நிறுவனத்தின் தொழில் பூங்கா திட்ட அதிகாரி அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.
இதில் தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. எனவே, மேற்கண்ட சேவைகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், அதற்கு, 25 அலுவலக நாட்களுக்குள் அனுமதி பெறுவதற்குமான வசதியை, சிப்காட் செயல்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக (05.03.2025) திருப்பூர்
-
கோதாவரியில் படகு கவிழ்ந்து இரு பயணியர் உயிரிழப்பு
-
திருமணமான 6 மாதங்களில் இன்ஜினியர் தற்கொலை; வரதட்சணை காரணம்?
-
வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
-
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று துவக்கம்
-
கார்பன் அடையாளத்தை கண்காணிக்க உதவும் 'ஏஐ' திருப்பூர் தொழில்துறையினர் நம்பிக்கை
Advertisement
Advertisement