இரண்டரை வயது குழந்தையை தாக்கிய ஆசிரியை மீது வழக்கு

நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே அங்கன்வாடி மையத்தில் இரண்டரை வயது குழந்தையை தாக்கிய ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அருமனை அருகே ஆலரவிளையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டிருந்த இரண்டரை வயது குழந்தையை சில நாட்களுக்கு முன் அடித்து காயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் நடத்திய சோதனையில் கழிப்பறையில் குழந்தைகளுக்காக வழங்கப்படும் உப்பு கரைசல் எனப்படும் ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்டுகளும், மருந்து பாட்டில்களும் குவிந்து கிடந்தன. இந்த வீடியோ வைரலான நிலையில் குழந்தையை தாக்கியதாக தாயார் அருமனை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து ஆசிரியை செல்வகுமாரி மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement