கோதாவரியில் படகு கவிழ்ந்து இரு பயணியர் உயிரிழப்பு

ராஜமுந்திரி; ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் நடுவில், பிரிட்ஜ் லங்கா என்ற தீவு உள்ளது. இங்கு வீசும் சுத்தமான காற்றை அனுபவிப்பதற்காக பலர் அடிக்கடி இந்த தீவுக்கு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இங்கு வந்த, 12க்கும் மேற்பட்டோர் தீவை சுற்றி பார்த்து விட்டு, நாட்டுப்படகில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த காற்று வீசியதில், படகில் இருந்தவர்கள் ஒரே பக்கமாக சாய்ந்ததில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியாகினர். அவர்களது உடல்கள் நேற்று அதிகாலை கரை ஒதுங்கின.

அவற்றை மீட்ட போலீசார் படகு விபத்து குறித்து விசாரிக்கின்றனர். மீன் பிடிப்பதற்கு பயன்படும் நாட்டு படகில் பயணியரை ஏற்றிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement