தொழில்நுட்ப போட்டியில் அசத்திய பண்ணாரி அம்மன்

கோவை:ஜாம்ஷெட்பூர், தேசிய தொழில்நுட்பக் கல்லுாரியின், 'ஓஜாஸ் 2025' தொழில்நுட்ப மேலாண்மை விழாவில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள், வெற்றிகளை குவித்துள்ளனர்.

தொழில்நுட்ப சவால்கள், வணிகப் போட்டிகள் மற்றும் படைப்பாற்றல் காட்சிப்படுத்தல்கள் என இந்த விழாவில், பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

மாணவர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களிலிருந்து, 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பண்ணாரி அம்மன் கல்லுாரி மாணவர்கள், மோகன் பிரசாந்த், கீர்த்திவாசன், பரணிதரன், மவுர்யா, ஜெய பிரசன்னா, மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

ஸ்டார்ட்அப் ஐடியாத்தான் மற்றும் டிரேஸ்பாட் சவால் போட்டியில் முதல் இடத்தையும், ரோபோவை உருவாக்கும் புதிர் தீர்க்கும் மாரத்தான் போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளை, மாணவர்கள் வென்றனர். மொத்தம் ரூ. 50,000 ரொக்கப்பரிசை தட்டிச்சென்றனர்.

Advertisement