முதல்வரின் தனிப்பிரிவுக்கு 4 முறை மனு அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை தி.மு.க., வர்த்தக அணி நிர்வாகி மீண்டும் மனு

கோவை:பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். மொத்தம், 38 மனுக்களை பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர்.
n இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பீளமேடு நகர குழு கொடுத்த மனுவில், 'பீளமேடு செங்காளியப்பன் நகரில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி தொகுதி மேம்பாட்டு நிதியில் 20 லட்சம் ரூபாய், பொது நிதியில் 30 லட்சம் ரூபாய் செலவழித்து, சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.
ஏழை எளிய மக்கள் நிகழ்ச்சி நடத்துவதற்காக கட்டப்பட்ட, இக்கூடம் பயன்பாடின்றி உள்ளது. மது அருந்தும் இடமாகவும், குப்பைக்கூளமாகவும் காட்சி அளிக்கிறது.
கடந்தாண்டு அக்., மாதம், வடக்கு மண்டல உதவி கமிஷனரிடம் மனு கொடுத்தோம்; தற்போது வரை நடவடிக்கை இல்லை. சமுதாய கூடத்தை சுத்தம் செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என கூறியுள்ளனர்.
n கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் செந்தில்மூர்த்தி கொடுத்த மனுவில், '33வது வார்டில், எனது வீட்டுக்கு எதிரே, சாக்கடை கால்வாயை மூடி, 2 அடி உயரம், 7 அடி அகலம், 70 அடி நீளத்துக்கு திண்ணை போல் கட்டியுள்ளனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடையூறாக உள்ளது.
அதை அகற்றி, ரோடு மட்டத்துக்கு சரி செய்ய வேண்டும். தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு நான்கு முறை மனு அளித்து விட்டேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் வந்தது; இன்று வரை நடவடிக்கை இல்லை. 2021 முதல் மனு கொடுத்து வருகிறேன்' என கூறியுள்ளார்.
மேலும்
-
கோலார், சிக்கபல்லாபூர் மாவட்ட குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம்
-
மாணவியை சீண்டிய பெரியப்பா கைது
-
எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 சதவீதம் சம்பள உயர்வு வேண்டுமாம் சட்டசபையில் விவாதித்து விரைவில் இறுதி முடிவு
-
கே.பி.எஸ்.சி.,யில் குளறுபடி: அசோக் காட்டம்
-
மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்த பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர்
-
98 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு