மா.கம்யூ., கட்சியின் மாநிலக்குழு கூடியது
திருப்பூர்,:மா.கம்யூ., கட்சியின், மாநில குழு கூட்டம், திருப்பூர் - செங்கப்பள்ளி ஸ்ரீனிவாசா மஹாலில் துவங்கியது.
இரண்டு நாட்கள் நடக்கும் மாநிலக்குழுவில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் சண்முகம், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எம்.பி.,கள் வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் மாலி, சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மதுரையில், அகில இந்திய மாநாடு நடக்க உள்ள நிலையில், மாநிலக்குழு கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், மா.கம்யூ., மாநில செயலாளரை சந்தித்தனர். இனாம் நில உரிமை மீட்பு போராட்டம் குறித்து பேசினர். ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கிய குழு அமைப்பு, தமிழக அரசை வலியுறுத்துவது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஊத்துக்குளி தாலுகா, வடுகபாளையம் கிராமத்தில், வக்பு போர்டு நிலம் என்று, பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் நேற்று, மா.கம்யூ., நிர்வாகிகளை சந்தித்து, வக்பு போர்டு தடையாணையை திரும்ப பெற வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
மேலும்
-
பி.யு.சி., 2ம் ஆண்டு கணித தேர்வு 12,533 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
-
சிவகுமார் - கன்னட திரையுலகினர் மோதல் விஸ்வரூபம்!: யஷ், சுதீப்புக்கு அவமரியாதை என குற்றச்சாட்டு
-
போதை விற்ற இருவர் கைது
-
வெல்லத்திலும் ரசாயனம் உணவு துறை கண்டுபிடிப்பு
-
அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
பெங்., - சென்னை சாலையில் பாதுகாவலர்கள் நிறுத்த முடிவு