கோலார், சிக்கபல்லாபூர் மாவட்ட குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம்

பெங்களூரு: “எத்தினஹொளே திட்டத்தில், கோலார் மற்றும் சிக்கபல்லாபூர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
சட்டசபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
ம.ஜ.த., - வெங்கடஷிவா ரெட்டி: கோலார் மற்றும் சிக்கபல்லாபூர் மாவட்டங்களுக்கு, நீர்ப்பாசன வசதி செய்யும் நோக்கில் எத்தினஹொளே திட்டம் துவக்கப்பட்டது.
ஆனால் துமகூரு மாவட்ட தாலுகாக்களின் ஏரிகள் நிரப்பப்படுகின்றன. அங்கு தண்ணீர் நிரப்புவதை நிறுத்தி, எங்கள் பகுதிக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
துணை முதல்வர் சிவகுமார்: எத்தினஹொளே திட்டத்தின் 24 டி.எம்.சி., தண்ணீரில், 18 டி.எம்.சி., தண்ணீர் பாய்கிறது. 16 டி.எம்.சி., தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும். சில பகுதிகளில் வனத்துறையினர் அனுமதி அளித்தால் பணிகள் நீடிக்கும்.
திப்டூர், கொரடகரே, சிக்கநாயகனஹள்ளி, மதுகிரி தாலுகாக்களின் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது.
சிக்கபல்லாபூர், கோலார் மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்ற பீதி, அம்மாவட்டங்களின் மக்களுக்கு உள்ளது.
முதல்வரின் உத்தரவுப்படி, கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களுக்கு எத்தினஹொளே திட்டத்தின் கீழ், தண்ணீர் கொண்டு வர முக்கியத்துவம் அளிக்கப்படும்.
காங்., - நாராயணசாமி: சிறிய நீர்ப்பாசனத்துறையில், என் தொகுதிக்கு 7 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் 3.55 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 2021லிருந்து, நிதி வழங்கப்படவில்லை.
என் தொகுதியில் ஆறுகள் இல்லை. ஏரிகளை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது.
எனவே கூடுதல் நிதியுதவி தாருங்கள். கே.சி.வேலி இரண்டாவது கட்டத்தில், பெங்களூரில் இருந்து, 400 எம்.எல்.டி., தண்ணீர் தர வேண்டும் என, ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் கட்டத்தில் போதுமான தண்ணீர் வந்தது. வறட்சி நீங்கியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.
ஆனால் இரண்டு ஆண்டுகளாக 280 எம்.எல்.டி., தண்ணீர் மட்டுமே வந்தது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கோலார் மாவட்டத்தின், கடைசி பகுதியான பங்கார்பேட் தொகுதிக்கு, தண்ணீர் சென்றடையவில்லை. நான்கு ஆண்டுகளாக நீர் கிடைக்கவில்லை. கே.சி.வேலி திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.
அமைச்சர் போசராஜு: கே.சி.வேலியின் ஜாக்வெல் பணிகளை, விரைந்து முடித்து நடப்பாண்டு செப்டம்பர் வேளையில் நீர் திறக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து