அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம் மாவட்ட, ஏ.ஐ.டி.யு.சி., அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் பரமசிவம் தலைமை வகித்தார். அதில் உடலுழைப்பு நல வாரியத்தில் பதிவு செய்து, 60 வயதை கடந்தோருக்கு, 3,000 ரூபாய் ஓய்வூதியத்தை, பிரதி மாதம், 5க்குள் வழங்குதல்; வீடற்றோருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டும்.


இடம் இருப்பின், வீடு கட்ட, 5 லட்ச ரூபாய் மானியம் வழங்க வேண்டும் உள்பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தேசியக்குழு உறுப்பினர் முனுசாமி, தலைவர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement