சமூக நீதி விழிப்புணர்வு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி சமுதாய கூடத்தில், நாகரசம்பட்டி போலீசார் சார்பில், பாலியல், சமூக நீதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., ஜெய்சிங் பேசுகையில், பெண்கள், பொதுமக்களுக்கு பாலியல் சீண்டல் மற்றும் சமூக நீதி விழிப்புணர்வு குறித்து தெளிவாக எடுத்துக்கூறி, எவ்வித அச்சமும் இன்றி பெண்கள் பாலியல் சீண்டல் குறித்து தாமாக முன்வந்து போலீசாரிடம் புகார் அளிக்க, கேட்டுக்கொண்டார். இதில் எஸ்.ஐ.,க்கள் சங்கீதா, அருணகிரி மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement