தேசிய வேளாண் சந்தை மூலம் 4,429 கிலோ மஞ்சள் ஏலம்

தர்மபுரி: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில், தர்மபுரி விற்பனை குழு செயல்பட்டு வருகிறது. இதில், விவசாயிகளின் விளைபொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு, அதிக விலைக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் தர்மபுரி விற்பனைக்குழு செயலாளர் முன்னிலையில் நடந்த ஏலத்தில், 4,429 கிலோ மஞ்சள் விற்பனையானது.

தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும், மஞ்சள் ஏலம் நடக்கிறது. இந்த ஏல மையத்தில், எவ்வித கமிஷனும் இன்றி, விற்பனை நடப்பதால், விவசாயிகள் ஏலத்தில் கலந்து கலந்து கொள்ளலாம்.

இது குறித்து, விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் கூறுகையில், ''நேற்று முன் தினம் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடந்த, மஞ்சள் ஏலத்தில், அதிகபட்சமாக பனங்காளி மஞ்சள் குவிண்டால், 21,709 ரூபாய், விரலி ரகம், 12,129 ரூபாய், உருண்டை ரகம், 10,469 ரூபாய் என, 18 விவசாயிகள், 117 மூட்டைகளில் கொண்டு வந்திருந்த, 4,429 கிலோ மஞ்சள், 6 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது,'' என்றார்.

Advertisement