சிக்னல் பழுதால் சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்! பயணிகள் பாதிப்பு

சென்னை; சிக்னல் பழுதால் சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிகாலை நேரத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகின்றனர். இந் நிலையில் விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகையில் தாமதம் காணப்படுகிறது.


மயிலம் அருகே சிக்னல் பழுதால் இந்த தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி விரைவு ரயில்கள், புதுச்சேரி-எழும்பூர் ரயில்கள் வருகையில் சுமார் 1 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.


நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு தாமதமாக செல்கின்றன. ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement