பூக்கள் விலை சரிவு கிலோ குண்டுமல்லி ரூ.200
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம், கம்பைநல்லுார், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடி நடக்கிறது. அறுவடை செய்யப்படும் பூக்களை விவசாயிகள், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
கடந்த மார்கழி, தை மாதத்தில், கோவில் விழாக்கள் காரணமாக, பூக்கள் தேவை அதிகரித்து விலை உயர்ந்து காணப்பட்டது. இதில், பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் சமயத்தில் குண்டுமல்லி, கனகாம்பரம் ஆகியவை ஒரு கிலோ, 2,000 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, பண்டிகை மற்றும் விழாக்கள் முடிவடைந்ததால், பூக்களுக்கான வரவேற்பு குறைந்து, நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி, 200, கனகாம்பரம், 200 ரூபாய் என, விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement