இழப்பீடு கேட்டு முற்றுகை

பாப்பாரப்பட்டி: பென்னாகரம் தாலுகா, பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாலவாடி பகுதியில் பவர் கிரேட் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, 400 கிலோ வாட் திறன் கொண்ட மின்சார டவர் புலிகரைப்பகுதியில் செல்கிறது. இதில் பாலவாடி, மாக்கனுார், கானாப்பட்டி, ஓ.ஜி.அள்ளி, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் கோபுரம் மூலம் அப்பகுதி விவசாயிகளின் நிலம் வழியாக செல்கிறது.

இந்த டவர் அமைத்து, 2 வருடங்கள் ஆகியும், இதுவரை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவில்லை. ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாலவாடி பகுதியில் அமைந்துள்ள பவர் கிரேட் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பாப்பாரப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உதவி செயற்பொறியாளர் எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement