பால்குட திருவிழா பக்தர்கள் பரவசம்

திருப்பூர்:திருப்பூரில், ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில், 19ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது.

திருப்பூர், சிறுபூலுவபட்டி, திருஆவினன்குடி நகரில் ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ கருப்பராயன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், 19ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது. நேற்று முகாம்பிகை காலனி ஸ்ரீ துர்கா விநாயகர் கோவிலிருந்து, பால்குடம் புறப்பட்டு, ஆனந்த விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தது.

தொடர்ந்து, அபிஷேக அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று, அம்மனை மனமுருக வழிபட்டனர். விழாவில், இன்று மாவிளக்கு ஊர்வலம், ஸ்ரீ கருமாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல் ஆகியன நடைபெறுகிறது.

Advertisement