மாணவர் உயிரிழப்பு; பள்ளியில் விழிப்புணர்வு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்த மவுலீஸ்வரன், 13, தந்தையின் இறைச்சி கடையில் கோழி சுத்தம் செய்யும் இயந்திரத்தை இயக்கும்போது மின்சாரம் பாய்ந்து நேற்று முன்தினம் இறந்தார். இதனால் நேற்று, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர் பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை பயன்படுத்தும் முறை குறித்து, மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உதவி செயற்பொறியாளர் சத்தியமாலா, மல்லுார் உதவி பொறியாளர் முருகன், வீட்டில் மின் கசிவு தடுப்பு சாதனத்தை பொருத்த வேண்டும்; பொது இடங்களில் மின் ஒயர், மின் மாற்றி, மின் கம்பம் அருகே செல்ல கூடாது; அறுந்து கிடக்கும், தண்ணீரில் கிடக்கும் ஒயரை தொடக்கூடாது; ஈரத்துடன் மின் சுவிட்சை இயக்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement