சேலம் - கொச்சின் விமான சேவை: வரும் 30 முதல் தினமும் இயக்கம்
ஓமலுார்: அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம், குளிர் கால(வின்டர் சீசன்) திட்டத்தில், சேலம் விமான நிலையத்தில் இருந்து, செவ்வாய், சனி தவிர்த்து, கொச்சின் - சேலம் - பெங்களூரு, மீண்டும் அதே தடத்தில் கொச்சினுக்கு பயணியர் சேவையை இயக்கி வருகிறது.
இந்நிலையில் வரும், 30 முதல், கோடை கால(சம்மர் சீசன்) திட்ட பயணப்படி, வாரத்தில், 7 நாட்களும் விமான சேவை இயக்கப்படும். அன்று முதல், மதியம், 12:10க்கு புறப்படும் விமானம், 1:20க்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து, 1:45க்கு புறப்பட்டு, 2:45க்கு பெங்களூருவை அடையும். அங்கிருந்து, 3:20க்கு புறப்பட்டு, 4:20க்கு சேலம் வரும். மீண்டும் இங்கிருந்து, 4:45க்கு புறப்பட்டு, 5:50க்கு கொச்சினை அடையும் என, விமான நிறுவன வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement