டி.என்.பி.எல்.,நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், 54வது தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடந்தது. நிறுவன பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் விபத்தில்லா ஆலையாக இருக்க வேண்டும் என, தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழியை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், பொதுமேலாளர் (இயந்திரம்) பிரின்ஸ் தொல்காப்பியன், துணை பொது மேலாளர் (பாதுகாப்பு) ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement