விவசாயிடம் ரூ.71 லட்சம் மோசடி குஜராத் வாலிபர்கள் இருவர் கைது

சென்னை,திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 56 வயதான விவசாயி ஒருவரை, மும்பையில் இருந்து, சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாக, பிப்., 17ல், மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார்.
'உங்கள் மீது, மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு பதிவாகி உள்ளது. உங்களை ஆன்லைன் வாயிலாக கைது செய்துள்ளோம். நீங்கள் பண மோசடி செய்யவில்லை என்றால், நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு, 71 லட்சம் ரூபாயை அனுப்புங்கள்.
'அதை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சரிபார்த்த பின், உங்கள் வங்கி கணக்கிற்கே திருப்பி அனுப்புவர். தவறினால், உங்களை நேரடியாக கைது செய்வோம்' என்று கூறியுள்ளனர்.
அதன்படி, 71 லட்சம் ரூபாயை விவசாயி அனுப்பி உள்ளார். அதன்பின், மர்ம நபர் தொடர்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, தன்னிடம் பண மோசடி செய்யப்பட்டது குறித்து, விவசாயி, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட சைபர் குற்ற தடுப்பு பிரிவுக்கு, கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தனிப்படை போலீசார், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். அதன்படி, குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் சோஜித்ரா ஹிரென், 26, ரோகாட் மீட்குமார், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களின் வங்கி கணக்கில் இருந்து, 5.66 லட்சம் ரூபாயை முடக்கி உள்ளனர்.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
வரி செலுத்தாத 2 நிறுவனங்களை இழுத்து மூடியது குடிநீர் வாரியம்
-
50 ஆயிரம் விடுதி மாணவருக்கு உணவு கட்டணம் வழங்காமல் இழுத்தடிப்பு; பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு