கலை பொருட்கள் விலை 2024ல் 18 சதவிகிதம் வரை வீழ்ச்சி

புதுடில்லி:அரிய கலைப்பொருட்கள், துாய ஒயின், மிக அரிய விஸ்கி, வண்ணம் தீட்டப்பட்ட வைரங்கள், மரச்சாமான்கள் போன்றவற்றின் விலை கடந்த ஆண்டு குறைந்து விட்டதாக, ஆலோசனை நிறுவனமான நைட் பிராங்க் தெரிவித்துள்ளது.

பழங்கால பொருட்கள், ஓவியங்கள், அரிய மதுபான வகைகள் ஆகியவற்றை பாதுகாப்போரிடம் இருந்து விலைக்கு வாங்கி, ஏல நிறுவனங்கள் விற்பனை செய்வது வழக்கம்.

இவற்றின் விலை குறியீட்டை, நைட் பிராங்க் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடுவதுண்டு.

கடந்த 2024ல் கலைப்பொருட்களின் விலை அதிகபட்சம் 18.30 சதவீதம் வீழ்ச்சி கண்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, அரிய ஒயின் மற்றும் விஸ்கி விலை 9 சதவீதம் குறைந்தது.

கடந்த ஆண்டில், 'டாப் 10' கலைப்பொருட்களில் கைப்பைகள் மட்டுமே சிறந்த சொகுசு சொத்து ரகமாக கருதப்பட்டு 2.80 சதவீதம் விலை உயர்ந்தன. நகைகள் 2.30 சதவீதம், நாணயங்கள் 2.10 சதவீதம், கைக்கடிகாரங்கள் 1.70 சதவீதம், கிளாசிக் கார்கள் 1.20 சதவீதம் விலை உயர்ந்தன.

Advertisement