பிளாஸ்டிக் பயன்பாடு கனஜோர் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பஜார் பகுதியில் அதிகளவு மளிகை, ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், சாலையோரங்களில் தள்ளுவண்டியில் வைத்தும் சிற்றுண்டி விற்கப்படுகிறது. பாஸ்ட் புட் கடைகளும் அதிகளவில் உள்ளன.
இதில் பெரும்பாலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.குறிப்பாக, இட்லி, தோசை, பாஸ்ட் புட் உணவு ஆகியவற்றை மெல்லிய பிளாஸ்டிக் கவரில் வைத்து பார்சல் செய்யப்படுகிறது.
இதனால், சூடான உணவு பொருளில் பிளாஸ்டிக் கலந்து, உடலுக்கு உபாதை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.
மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும், பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
வரி செலுத்தாத 2 நிறுவனங்களை இழுத்து மூடியது குடிநீர் வாரியம்
-
50 ஆயிரம் விடுதி மாணவருக்கு உணவு கட்டணம் வழங்காமல் இழுத்தடிப்பு; பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு