முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனைநடந்தது.
காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானைக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தற்போது, மாசி பிரம்மோற்சவம் மற்றும் கிருத்திகை விழாவை ஒட்டி, வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலில், பொதுவழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
அதேபோல், முருகன் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், காலை 8:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் கோவிலில், அதிகாலை, மதியம் மற்றும் இரவு என, மூன்று வேளைகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலில், நேற்று மாசி கிருத்திகை உத்சவம்விமரிசையாக நடந்தது.
காலை 8:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர்செங்கல்வராய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து மஹா தீபாராதனை நடந்தது.
பள்ளிப்பட்டு, நெடியம், சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை மற்றும் ஆந்திரமாநிலம் சத்திரவாடா, நகரி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
அதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை,நெல்லிக்குன்றம் மலைக்கோவில், ராணிப்பேட்டை மாவட்டம், கரிக்கல் குமரேசகிரி மலைக் கோவில்களிலும் நேற்று கிருத்திகைஉத்சவம் நடைபெற்றது.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
50 ஆயிரம் விடுதி மாணவருக்கு உணவு கட்டணம் வழங்காமல் இழுத்தடிப்பு; பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு
-
தொழில் உரிமம் புதுப்பிக்க மும்மடங்கு கமிஷன் கேட்டு மிரட்டல்; மாநகராட்சி அதிகாரிகள் மீது வணிகர்கள் குற்றச்சாட்டு