ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.3

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று, 1 கிலோ தக்காளி 3 முதல் 5.75, சின்ன வெங்காயம் 10 முதல் 40, பீட்ரூட் 3, சுரைக்காய் 1.50, அவரைக்காய் 12, புடலை 5, பச்சைப்பயறு 9 ரூபாய்க்கு விற்பனையானது.

அதுபோல, டிஸ்கோ கத்தரிக்காய் 3.35, சவ்சவ் 7, பீன்ஸ் 15, சம்பா பச்சை மிளகாய் 15, உருண்டை பச்சை மிளகாய் 16 ரூபாய்க்கு விற்பனையானது.

சில நாட்களாக தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எடுப்புக்கூலி, போக்குவரத்து செலவினங்களுக்குக் கூட கட்டுப்படியாகாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement