நண்பர்கள் இறந்த துக்கம்வாலிபர் விபரீத முடிவு


நண்பர்கள் இறந்த துக்கம்வாலிபர் விபரீத முடிவு


பவானி:அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர், காந்திநகரை சேர்ந்தவ பூபாலன், 28; இன்ஜினியரிங் முடித்து குருவரெட்டியூரில் பைக் ஷோரூமில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர்ககள் பாபு, கவின். இருவரும் கடந்த ஜன., மாதம் சாலை விபத்தில் இறந்தனர். இதனால் பூபாலன் மன வேதனை அடைந்தார். வீட்டிலும் புலம்பியபடியே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். நண்பர்கள் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement