'மாநகரில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் திட்டம்ரூ.750 கோடியில் நிறைவேற்ற ஒப்பந்தப்புள்ளி'



'மாநகரில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் திட்டம்ரூ.750 கோடியில் நிறைவேற்ற ஒப்பந்தப்புள்ளி'


சேலம்:-சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் குறித்து, அம்மாபேட்டை, ஆதிசெல்வன் தெருவில் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
மாநகராட்சியில், அம்மாபேட்டை உள்பட, 4 மண்டலங்களில், 60 வார்டுகள் உள்ளன. இங்கு மக்கள் தொகை, 8.50 லட்சமாக உள்ளது. நங்கவள்ளி கூட்டுக்குடிநீர், தனி குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் மூலம் காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது. மாநகராட்சியில் தற்போதைய மக்கள் தொகைப்படி தினமும், 135 எம்.எல்.டி., குடிநீர் தேவைப்படுகிறது. தினமும், 140 எம்.எல்.டி., திறன் கொண்ட, மேற்குறிப்பிட்டுள்ள இரு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குறிப்பாக, 51 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம், 3 முதல், 7 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்கப்படுகிறது.
குழாய் உடைப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால், குடிநீர் வழங்க தாமதம் ஏற்பட்டால், விரைவில் சீரமைத்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணி நடக்கும்போது, குழாய்களுக்கு சேதம் ஏற்படாதபடி பணி மேற்கொள்ள வேண்டும். சீரான குடிநீர் வழங்க வார்டு வாரியாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கிய நிலையில் குடிநீரை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்தி, விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 'அம்ரூத்' 2.0 திட்டத்தில் மாநகராட்சிக்கென, 750 கோடி ரூபாயில், தனியார் பங்களிப்புடன் குடிநீர் திட்டம் நிறைவேற்ற தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியன்(பொ) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோடைகாலம் தொடங்கிய நிலையில் குடிநீரை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்தி, விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement