திருச்செங்கோட்டில்நீர் மோர் பந்தல் திறப்பு



திருச்செங்கோட்டில்நீர் மோர் பந்தல் திறப்பு


திருச்செங்கோடு:திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கோடை காலத்தை முன்னிட்டு நகர, தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகர செயலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் மூர்த்தி திறந்து வைத்தார். கோடை காலம் மற்றும் திருவிழா காலம் என்பதால், பொதுமக்கள் தாகம் தணிக்க குடிநீர் வழங்க நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement