சிறுவர் பூங்காவில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

பூங்காவில் உள்ள தேவையற்ற செடி, கொடிகள் மற்றும் புற்களை அகற்றி துாய்மையாக பராமரித்திடவும், பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கிடவும், கழிவறைகளை துாய்மையாக பராமரித்திட வேண்டும் என, அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, நகராட்சி கமிஷனர், உதவி பொறியாளர் ராபர்ட் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். முன்னதாக, விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவினை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆய்வு செய்தார்.

அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, மாவட்ட நுாலக அலுவலர் காசீம், துணை கலெக்டர் (பயிற்சி) பிரேமி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement