மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ., கையெழுத்து இயக்கம்


மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ., கையெழுத்து இயக்கம்


கரூர்:மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக, பா.ஜ., சார்பில் சமக்கல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இதன்படி, கரூர் டி.செல்லாண்டிபாளையத்தில், தெற்கு நகர பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்து, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் பஞ்சாயத்துகளில் கையெழுத்து பெற உள்ளோம். தி.மு.க.,வினர் ஹிந்தி திணிப்பு என்று தவறாக கருத்தை பரப்பி வருகின்றனர். இதில், நீங்கள் விருப்பப்பட்ட மொழியை படித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து விட்டது. ஏழை, எளிய மக்கள் பல மொழிகள் கற்கும் வாய்ப்பை தமிழக அரசு தடுத்து வருகிறது. கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட பார்வையாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரி, மாவட்ட செயலாளர் ரமேஷ், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் மோகன்ராஜ், கரூர் தெற்கு நகரம் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமையில், லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் மக்களிடம் மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம் பணி துவங்கப்பட்டது. முன்னாள் ஒன்றிய தலைவர் சாமிதுரை, மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் பெருமாள், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் அய்யாவு, ஒன்றிய மகளிர் அணி தலைவர் லதா உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

Advertisement