மாத்துார் ஊராட்சியில் ஜெ., பிறந்த நாள் விழா

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் ராயப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் உமா ராஜன் ஒன்றிய கவுன்சிலர் சுமதி கோவிந்தன், துணைத் தலைவர் அலமேலு வீரமணி, விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், கிளைச் செயலாளர் முனியப்பிள்ளை, சிவாஜி, பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement