உலக நுகர்வோர் உரிமைகள் தினம்; மாணவர்களிடம் கட்டுரை வரவேற்பு

புதுச்சேரி : உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, மாணவர்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால் செய்திகுறிப்பு;

இந்திய பொது நிர்வாக நிறுவனம் சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 15ம் தேதி இந்த தினம் கொண்டாடுவதை முன்னிட்டு, மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது.

அதற்காக, மாணவர்களிடம் இருந்து, உலக மயமாக்குதலில் சந்தை மற்றும் நுகர்வோரின் நிலைமை, நுகர்வோரின் பாதுகாப்பு சட்டம் மற்றும் கொள்கை, இணையதளம் மூலம் வாங்கும் பொருட்களுக்கு நுகர்வோரின் சட்ட பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் கட்டுரை வரவேற்கப்படுகிறது. கட்டுரை, 350 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், ஏ 4 பேப்பரில், இரண்டு பக்கம் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் இருக்கலாம்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இ-சான்றிதழும், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கட்டுரை வரும் 10ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். கட்டுரைகளை iipapuducherry@gmail.com, iipaofficework@gmail.com ஆகிய இ-மெயிலில் அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement