பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயகல்லுாரியில் போக்குவரத்து விதிமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு)லலிதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, சமூகப் பொறுப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.

என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

போக்குவரத்து சீனியர் எஸ்.பி., ஸ்ரீ பிரவீன் குமார் திரிபாதி, கலந்து கொண்டு அதிகரித்து வரும் சாலை விபத்துகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் சிறப்புரையாற்றினார்.

சாலை பாதுகாப்பு குறித்த வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழக என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பல்கலைக்கழக மக்கள் தொடர்பியல் துறை ஆராய்ச்சி மாணவி ஸ்ரீலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் செல்வம் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் செய்திருந்தனர்.

Advertisement