ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா

புதுச்சேரி : கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாடப்பட்டது.
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லூரியின் ஐ.எஸ்.டி.இ., மற்றும் ஐ.ஐ.சி., இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின விழாவிற்கு, கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். காக்னிசண்ட் நிறுவனத்தின் பயிற்சி மேலாளர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், 'இன்னோவேஷனில் ஜெனரேட்டிவ் ஏஐ., யின் பங்கு என்ற தலைப்பில் விரிவாக விளக்கினார்.
மேலும் தொழில் துறைகளில் அதன் பயன்பாடு, நெறிமுறைகள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விளக்கி, மாணவர்களை ஏஐ சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஆராய ஊக்குவித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திட்டக் கண்காட்சி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவ்ராம் அல்வா, பொருளாளர் விமல், அகாடெமிக்ஸ் டீன் கனிமொழி, பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் ஜெபஸ்டின் சோனியா ஜாஸ், பாலாஜி, அருணா குமாரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மேலும்
-
25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு
-
பஸ் பாஸ் புதுப்பித்தல் முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
-
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் சுகாதாரத்துறை தீவிரம்
-
திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு; சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு மக்கள்
-
அரசு உதவி தொகை குறித்த விழிப்புணர்வு முகாம்
-
வைக்கோல் வாங்க குவியும் வெளிமாவட்ட வியாபாரிகள்