கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்

சேலம் : திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த தனியார் பயிற்சி மைய ஆசிரியை அல்பியா, 34, நேற்று முன்தினம், உடல் அழுகிய நிலையில், ஏற்காடு, 60 அடி பாலம் அருகே மீட்கப்பட்டார்.
தொடர்ந்து, அப்பெண்ணின் காதலன் பொறியியல் கல்லுாரி மாணவர் அப்துல் ஹபீஸ், 22, அவரது காதலிகள் மோனிஷா, 21, தாவியா சுல்தானா, 22, ஆகியோர், அல்பியாவை கொலை செய்தது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: அப்துல் ஹபீஸ், சேலத்தில் மொபைல் போன் கடையில் பணியாற்றியபோது, அங்கு மொபைல் போன் பழுதுபார்க்க வந்த அல்பியாவுடன் காதல் ஏற்பட்டு, கேரளா உள்ளிட்ட வெளி இடங்களுக்கு பலமுறை சென்று நெருக்கமாக இருந்துள்ளனர்.
தொடர்ந்து துறையூரில் படிக்கும் நிலையில், தாவியா சுல்தானாவுடன் ஹபீசுக்கு பழக்கம் ஏற்பட்டு, இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் முடிவானது. இதைத்தவிர கொரோனா காலத்தில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுரியில் படிக்கும் மாணவி மோனிஷா, துறையூரில் முகாமுக்கு வந்த போது ஹபீஸ், கொரோனா நிவாரண பொருட்களை அடிக்கடி வழங்கி வந்துள்ளார். இதில், ஹபீஸ், மோனிஷாவையும் வலையில் வீழ்த்தினார்.
இதற்கிடையே, ஹபீசுக்கு திருமணம் நிச்சயமானது அல்பியாவுக்கு தெரியவர, வாக்குவாதம் செய்துள்ளார். 'உன் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்வேன்' என, அழுதுள்ளார். இதனால், ஹபீஸ், மோனிஷா உதவியுடன், அல்பியாவை கொல்ல திட்டமிட்டார்.
தாவியா சுல்தானாவிடம், 'சேலத்தில் ஒரு பெண்ணிடம் சகோதரியாக பழகினேன். அவர் காதலிப்பதாகவும், இல்லை என்றால் இறந்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். நம் திருமணத்துக்கு இடையூறாக உள்ளார். அவரை கொன்றுவிடலாம். என் தோழி மருத்துவம் படிக்கிறார். அவர் மூலம் இத்திட்டத்தை நடத்தலாம்' என, கூறினார்.
பின், இருவரும் சேர்ந்து மோனிஷாவை கட்டாயப்படுத்தி கொலை சதிக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். வாடகை காரில் ஏற்காடு சென்ற போது, வழியில் வீரியமிக்க மயக்க ஊசியை மோனிஷா செலுத்த, அல்பியா மயங்கியதும், மலையில் இருந்து தள்ளி விட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால், எஸ்.சி., -- எஸ்.டி., வழக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஹபீசின் மொபைல் போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. அது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












மேலும்
-
25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு
-
பஸ் பாஸ் புதுப்பித்தல் முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
-
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் சுகாதாரத்துறை தீவிரம்
-
திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு; சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு மக்கள்
-
அரசு உதவி தொகை குறித்த விழிப்புணர்வு முகாம்
-
வைக்கோல் வாங்க குவியும் வெளிமாவட்ட வியாபாரிகள்