துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

புதுடில்லி: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும், ஜக்தீப் தன்கர் உள்ளார். இவருக்கு வயது 73. இன்று காலை ஜக்தீப் தன்கருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், இருதய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம் என டாக்டர்கள் தெரிவித்தனர். விரைவில் சிகிச்சை முடிந்து, வீடு திரும்புவார் என்று டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பிரதமர் நலம் விசாரிப்பு
ஜக்தீப் தன்கரை சந்தித்து நலம் விசாரித்த பிறகு பிரதமர் மோடி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை சென்று, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் நலம் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (4)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
09 மார்,2025 - 14:54 Report Abuse

0
0
Reply
எவர்கிங் - ,
09 மார்,2025 - 10:57 Report Abuse

0
0
N Sasikumar Yadhav - ,
09 மார்,2025 - 12:11Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
09 மார்,2025 - 10:54 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவக்கம்
-
இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன்; 3வது முறையாக மகுடம் சூடியது
-
3வது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு: ஆந்திர எம்.பி., அறிவிப்பு
-
ஹரியானாவில் 14வது மாடியில் இருந்து விழுந்த ஜப்பான் பெண் பலி!
-
வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர் சுட்டுப்பிடிப்பு
Advertisement
Advertisement