ஹரியானாவில் 14வது மாடியில் இருந்து விழுந்த ஜப்பான் பெண் பலி!

குருகிராம்: ஹரியானாவில் 14வது மாடி பால்கனியில் இருந்து ஜப்பான் நாட்டு பெண் விழுந்து பலியானார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


ஜப்பானைச் சேர்ந்தவர் மடோகா தமானோ(34). ஹரியானாவின் குருகிராமில் உள்ள அடுக்குமாடி ஒன்றின் 14வது குடியிருப்பில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.


இந்நிலையில் அதே குடியிருப்பு வளாகத்தின் தரை பகுதியில் ரத்தம் தோய்ந்த நிலையில் மடோகா தமானோ இறந்து கிடப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றினர்.


பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 14வது மாடி பால்கனியில் இருந்து அவர் தவறி விழுந்து இருக்கலாம் என்று போலீசார் கூறி உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement