திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்துங்க; கட்சியினருக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை: திண்ணை பிரசாரத்தை அ.தி.மு.க.,வினர் தீவிரப்படுத்த வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவுறுத்தி உள்ளார்.



அனைத்து மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து காணொளியில் அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். அப்போது பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.


அப்போது நிர்வாகிகளிடம் இ.பி.எஸ்., கூறியதாவது:
திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி பட்டியலை அ.தி.மு.க., தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் . பூத் கமிட்டி மிகவும் முக்கியமான ஒன்று. அதனை விரைந்து அமைக்க வேண்டும். காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்து உள்ளார்.

Advertisement