ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டும் பிரசாந்த் கிஷோர்: துரை வைகோ காட்டம்

27

மதுரை: 'பிரசாந்த் கிஷோர் ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுபவர். தமிழகத்தில் அவர் சொல்வது நடக்காது' என்று ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மக்காச்சோளத்துக்கு செஸ் வரி போட்டிருந்ததை நீக்க வேண்டும் என்று முதல்வரையும், துணை முதல்வரையும், நிதி அமைச்சரையும் சந்தித்து கேட்டுக் கொண்டேன். அதன்படி நீக்கம் செய்த அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழில் என்பது மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.



பிளாஸ்டிக் லைட்டரால் அந்த மக்களுக்கு பாதிப்பு வந்தது. மத்திய அரசிடம் முறையிட்டு பிளாஸ்டிக் லைட்டரை இறக்குமதி செய்வதற்கான தடையை கொண்டு வர பேசினேன். இதனை விற்பனை செய்வதற்கான தடையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தேன். கண்டிப்பாக அதற்கான முயற்சி எடுப்பேன்.


பிரசாந்த் கிஷோர் பொலிடிக்கல் அனலிஸ்ட். அவர் சொல்வதெல்லாம் 100க்கு 100 நடப்பது கிடையாது. பிரசாந்த் கிஷோர் ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுபவர். தமிழகத்தில் அவர் சொல்வது நடக்காது. விஜயை பொறுத்தவரை மிகப்பெரிய நட்சத்திரம். அவர் பின் நிறைய இளைஞர்கள் உள்ளனர்.


அவருடைய கொள்கைகளை சிந்தாந்தங்களை சொல்லி இருக்கிறார். அதை வரவேற்கிறோம். இந்த அரசை எதிர்க்கிற எதிர்க்கட்சியாக அவருடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

Advertisement