கலிபோர்னியா ஹிந்து கோவிலில் நாசவேலை; இந்தியா கடும் கண்டனம்

26

புதுடில்லி: கலிபோர்னியா ஹிந்து கோவிலில் மர்ம நபர்கள் நாச வேலையில் ஈடுபட்டதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள சாக்ரமெண்டோ நகரில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. இங்கு மர்ம நபர்கள் நாசவேலை செய்துள்ளனர். கோவில் சுவர்களில், 'ஹிந்துகள் திரும்பி செல்லுங்கள்' என வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் நடந்த நாசவேலை தொடர்பான செய்திகளை நாங்கள் அறிந்தோம். இது போன்ற இழிவான செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.



இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement