குட்கா விற்றவர் கைது
ஸ்ரீபெரும்புதுார்ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுகோட்டை சிப்காட் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் படி, போலீசார் நேற்று முன்தினம், இருங்காட்டுகோட்டை சிப்காட் பகுதியில் உள்ள பெட்டி கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், ஹான்ஸ், விமல், கூல் லிப், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் கீவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாரி, 44, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement