கழிவறையில் கிடந்த மிரட்டல் கடிதம்; வந்த வழியிலே மீண்டும் திரும்பியது விமானம்!

மும்பை: மும்பையில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் 320 பேர் பயணம் செய்த விமானம் மும்பைக்கே திரும்பியது.
மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு ஏர் இந்தியா சென்று கொண்டிருந்தது. விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டதால், நடுவானில் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். விமானத்தின் கழிப்பறை ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற AI119 விமானத்தில் விமானத்தின் நடுவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டது. தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு, விமானத்தில் இருந்த அனைவரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானம் மும்பைக்குத் திரும்பியது.
விமானம் 10.25 மணிக்கு மும்பையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும்
-
ஜார்க்கண்ட் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
-
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு
-
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை
-
எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?
-
ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
-
திருச்செந்தூர் மாசித்திருவிழா;பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்