எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி ஜாம்ெஷட்பூர் அணிக்கு அபாரமாய் விளையாடினர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சென்னையில் அவ்வப்போது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டி நடந்து வந்தது.
சென்னை அணி நாட்டில் உள்ள மற்ற பிரபல அணிகளுடன் நேரு ஸ்டேடியத்தில் தங்கள் திறமையைக் காட்டினர்.,ஆனால் பெரும்பாலும் தோல்வி அல்லது டிராவிலேயே ஆட்டம் முடிந்தது.இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னையின் எஃப்சி அணி 24 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 6 டிரா, 11 தோல்விகளுடன் 27 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறமாட்டார்கள் என்ற நிலையில் சென்னை அணியும், ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட ஜாம்ெஷட் பூர் அணியும் நேற்று மோதின.ஏற்கனவே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் ஆட்டம் சுமாராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
ஜாம்ெஷட் பூர் அணியின் கால்களிலேயே பெரும்பாலும் பந்து இருந்தாலும் கிடைத்த வாய்ப்பு வீணாக்காமல் சென்னை அணி முன்னேறிச் சென்று கோல்கள் போட்டது, இதன் காரணமாக 5க்கு 2 என்ற கோல்கணக்கில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் உற்சாகமாய் குரல் கொடுத்தனர்.
மேலும்
-
அரிய வகை மரபியல் நோயால் லக்சம்பர்க் இளவரசர் மரணம்
-
திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; சேவைகள் பாதித்ததாக பயனர்கள் அதிருப்தி
-
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் பெங்களூருவில் கைது
-
வாக்காளர் பட்டியல் விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு
-
மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் எழுதி கடமை முடிப்பதற்கு கண்டனம்: சீமான்
-
திருத்தணி காய்கறி சந்தை பெயர் மாற்றம்; இது பா.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி: அன்பு மணி