ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஆபாச ரீல்ஸ் வழக்கில் சிக்கிய யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடலுாரைச் சேர்ந்தவர் சித்ரா 54. மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
திவ்யா கள்ளச்சி என்ற யுடியூப் சேனல் நடத்தி வரும் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா 30, ஈரோட்டைச் சேர்ந்த கீழக்கரை கார்த்திக் என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் கீழக்கரை கார்த்திக் 30, என்பவரும் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்துள்ளதாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சித்ரா புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய வங்கி கணக்கை ஹேக் செய்து ரூ.2.5 லட்சத்தை திவ்யா எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களிடம் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தினார். அதில் யுடியூபர்கள் திவ்யா , கீழக்கரை கார்த்திக் ஆகியோர் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துாரில் வைத்து சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச ரீல்ஸ் எடுத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி புகாரில் திவ்யா, கீழக்கரை கார்த்திக் ஆகியோரிடம் ஏ.டி. எஸ். பி. சூரியமூர்த்தி, டி.எஸ்.பி. ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மலையரசி விசாரித்தனர். விசாரணையில் சித்ரா சொல்லி தான் வீடியோ எடுத்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.
இவர்கள் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.




மேலும்
-
கல்லுாரி மாணவியரின் கலை அழகு மிக்க புகைப்படங்கள்
-
ஜார்க்கண்ட் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
-
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு
-
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை
-
எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?
-
திருச்செந்தூர் மாசித்திருவிழா;பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்