ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

8

சென்னை: ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி நிச்சயம் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


செங்கல்பட்டில் ரூ.515 கோடியில் அமைந்துள்ள கோத்ரேஜ் ஆலையைத் திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நுகர்பொருள் சந்தை வாய்ப்பு தமிழகத்தில் அதிகம். கடந்த 2024ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு ஒரே ஆண்டில் ஆலை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தெற்காசியாவில் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் தமிழகம்; இந்தியாவின் வளர்ச்சியில் நம் மாநிலம் முக்கியப்பங்கு வகிக்கிறது. நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்றாக இருக்கும் தமிழகத்தில், நுகர்வோர் பொருட்கள் சந்தை வாய்ப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளது.



பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம். ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி நிச்சயம். அதை தான் நாங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறோம். இவ்வாறு முதல்வர ஸ்டாலின் பேசினார்.

Advertisement