வாக்காளர் பட்டியலில் முறைகேடு; பார்லியில் விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்

புதுடில்லி: 'வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக பார்லியில் விவாதம் நடத்த வேண்டும்' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் வலியுறுத்தி உள்ளார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், ஜன., 31ல் துவங்கி, பிப்., 13ல் முடிந்தது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் இன்று துவங்கி, ஏப்., 4 வரை நடக்க உள்ளது. பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் நடந்ததாக கூறப்படும் மோசடி குறித்து ராகுல் கேள்வி எழுப்பினார்.

அப்போது ராகுல் பேசியதாவது: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒவ்வொரு எதிர்க்கட்சிகளும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்புகின்றன. வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக பார்லியில் விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement