மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு

வாஷிங்டன்; விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் மார்ச் 16ம் தேதி பூமிக்கு திரும்புவதாக நாசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார்.
கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் அவரும் பேரி வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி உள்ளனர்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் 9 மாதங்கள் விண்வெளியில் கழித்த பிறகு,எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.


மேலும்
-
கல்லுாரி மாணவியரின் கலை அழகு மிக்க புகைப்படங்கள்
-
ஜார்க்கண்ட் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
-
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு
-
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை
-
எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?
-
ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது