மத்திய அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
சென்னை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ் எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள்' என, லோக்சபா கூட்டத்தொடரில் பேசியதை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தி.மு.க.,வினர் நேற்று, அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மாதவரம் அடுத்த மூலக்கடை சந்திப்பில் நேற்று, வடகிழக்கு மாவட்ட தி.மு.க.,வினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், மாவட்ட கழக செயலர் மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிய தி.மு.க.,வினர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால், அப்பகுதியில் நேற்று, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement