தமிழர்களுக்கு பாதிப்பென்றால் முதல்வரே பொறுப்பு: பாண்டியன்
தஞ்சாவூர் : தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலரும், சம்யுக்த கிசான் மோர்சா அமைப்பின், தமிழக ஒருங்கிணைப்பாளருமான பாண்டியன் நேற்று அளித்த பேட்டி:
காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் முனைப்பாக இருக்கிறது. மத்திய அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடக முதல்வரின் கருத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை. கர்நாடகாவை சேர்ந்த தீய சக்திகள், தமிழ் திரைப்படங்களை அனுமதிக்க மாட்டோம் என பேசி இருப்பது, தமிழர்கள் மீதான தாக்குதல்களை துவக்கும் உள்நோக்கம் கொண்டது.
தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு தமிழக முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்
Advertisement
Advertisement