கடிதம் எழுதும் பயிற்சி

புதுச்சேரி: திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தபால் அட்டை (கடிதம்) எழுதும் பயிற்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மங்களம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மோகன்ராஜ் மாணவர்களை வழிகாட்டி ஊக்கப்படுத்தினார்.

இப்பயிற்சியில், மாணவிகளுக்கு உறவினர்களுக்கு தங்களுடைய சொந்த கருத்துகளைக் கடிதம் வழியாக எழுதி தபால் அனுப்பும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியின் மூலம் அஞ்சல் அனுப்பும் முறை, அஞ்சல் நிலையத்தின் பணிகள் குறித்தும் தெரிந்து கொண்டனர்.

Advertisement